நானி-கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'தசரா' படத்தின் டிரைலர் 14-ந்தேதி வெளியீடு
|‘தசரா’ படத்தின் டிரைலர் வரும் 14-ந்தேதி ரிலீசாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
சென்னை,
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நானி, 'அடடே சுந்தரா' படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 'தசரா' படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.
மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த படத்தில் இருந்து இதுவரை 3 பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 'தசரா' படத்தின் டிரைலர் வரும் 14-ந்தேதி ரிலீசாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
Jaathara shuru
Trailer on 14th March. #DasaraOnMarch30 pic.twitter.com/1keRv4zbmT